[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

காயம்: டிவில்லியர்சை தொடர்ந்து டுபிளிசிஸும் விலகினார்!

du-plessis-out-of-india-series-with-fractured-finger

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ், இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இப்போது ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் ஆடி வருகின்றன. டர்பனில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, அபாரமாக வெற்றி பெற்றது. அடுத்த போட்டி, நாளை நடக்கிறது. 

இந்நிலையில் காயம் காரணமாக, தென்னாப்பிரிக்கா கேப்டன் டுபிளிசிஸ் விலகியுள்ளார். கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்படும் அவர், இந்திய அணியுடனான எஞ்சிய போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பர்ஹான் பெஹர்தீன் சேர்க்கப்பட்டுள்ளார்.  கேப்டனாக ஹாசிம் ஆம்லா செயல்படுவார் என்று தெரிகிறது. 

காயம் காரணமாக டிவில்லியர்ஸ் ஏற்கனவே விலகியுள்ள நிலையில், முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த டுபிளிசிஸும் விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close