[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

ஒருநாள் போட்டி: சேவாக் தேர்வு செய்த இந்திய அணி!

india-vs-south-africa-1st-odi-ajinkya-rahane-absent-from-virender-sehwag-s-playing-xi-for-durban-tie

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சேவாக் தனது விருப்ப அணியை தேர்வு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி, டர்பனில் உள்ள கிங்க்ஸ்மேட் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது. 

இதுவரை இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் இறுதிப்பட்டியல் உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படவில்லை. இந்திய அணியில் மொத்த பட்டியலில் படி, ரோகித் ஷர்மா, சிக்கர் தவான், விராட் கோலி(கே), ரஹானே/ஸ்ரேயாஸ் ஐயர்/மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், பாண்டியா, தோனி, புவனேஷ்குமார், தாகுர்/சமி, சஹால்/குல்தீப், பும்ரா ஆகியோர் உள்ளனர். இதில் / பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தில் ஏதெனும் ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார். குறிப்பாக நான்காவது இடத்தில் உள்ள ரஹானே/ஸ்ரேயாஸ் ஐயர்/மணிஷ் பாண்டே இவர்களின் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பமே அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக கூறியிருந்த கேப்டன் கோலி, ரஹானே அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது விருப்ப அணியை சேவாக் தெரிவித்துள்ளார். அதன்படி, ரோகித் ஷர்மா, சிக்கர் தவான், விராட் கோலி, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, பாண்டியா, புவனேஷ்குமார், சமி, பும்ரா மற்றும் சஹால் ஆகியோர் அடங்கிய அணி சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன் மணிஷ் பாண்டே ஒரு சிறந்த வீரர் என்றும் தற்போது அளிக்கப்படும் வாய்ப்பு அவரது 2019 உலகக் கோப்பை ஆட்டத்துக்கு உதவும் வகையில் அமையும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close