[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்

அப்பாடா, அணிக்கு திரும்பினார் சுரேஷ் ரெய்னா!

raina-storms-his-way-back-into-t20i-squad-for-south-africa-series

இந்திய கிரிக்கெட் அணியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சுரேஷ் ரெய்னா, ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. சுழற்பந்துவீச்சாளரும் கூட. இவர் கடைசியாக, கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கினார். அதற்கு பிறகு மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி, இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை. இதற்கு யோ-யோ டெஸ்ட்டில் அவர் தேர்வு பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் கடுமையான பயிற்சிக்குப் பின், சமீபத்தில் அந்த தேர்வில் சுரேஷ் ரெய்னா தேர்வு பெற்றார். 

இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அவர் அதிரடி சதம் அடித்து மிரட்டினார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து ஆறு போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதற்கு பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்காக, 16 வீரர்கள் கொண்ட அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. 

அணி விவரம்:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, மனீஷ் பாண்டே, அக்‌ஷர் படேல், சேஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, உனட்கட், ஷர்துல் தாகுர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close