[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

ஐபிஎல்: ரூ.12.5 கோடிக்கு ஏலம் போனார் ஸ்டோக்ஸ்!

ben-stokes-has-been-sold-to-rajasthan-royals-for-rs-12-5

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 12.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் சார்பில் 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும் அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். இதனால் மற்ற வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு ஆரம்ப விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரூ.9.4 கோடிக்கு எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லை ரூ.9 கோடிக்கு டெல்லி அணியும், பங்களாதேஷ் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ரூ.2 கோடிக்கு சன் ரைசர் அணியும் எடுத்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களது முந்தைய வீரர்கள் மூன்று பேரை தக்க வைத்துக் கொள்ளலாம். மேட்ச் கார்டு மூலம் 2 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டது. 

அதன்படி மேட்ச் கார்டு அடிப்படையில் ரஹானேவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரூ.4 கோடிக்கு தக்க வைத்துக்கொண்டது. தென்னாப்பிரிக்காவின் டுபிளிஸ்சை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ.1.6 கோடிக்கும் வெஸ்ட் இண்டீஸின் பொல்லார்டை ரூ 5.4 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் தவானை ரூ.5.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் தக்க வைத்துக்கொண்டது. 
தமிழக வீரர் அஸ்வினை கண்டுகொள்ளாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்பஜன் சிங்கை, அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுத்துள்ளது. அஸ்வினை பஞ்சாப் அணி, 7.6 கோடிக்கு எடுத்துள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close