[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

சவாலான பிட்ச்தான். ஆனால், அபாயகரமானது இல்லை: ரஹானே பேட்டி

challenging-pitch-but-not-dangerous-rahane

ஜோகன்னஸ்பர்க் பிட்ச் சவாலானதாக இருந்தது என்றும் அது அபாயகரமானதாக இல்லை என்று, இந்திய அணி வீரர் ரஹானே கூறினார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹானே 48 ரன்கள் எடுத்தார். பின்னர்  இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 17 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. பந்து தாறுமாறாக எகிறிய நிலையில், பும்ரா வீசிய பந்து தென்னாப்பிரிக்க தொடக்‌க ஆட்டக்காரர் டீன் எல்கரின் நெற்றியை பதம் பார்த்தது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் நடுவர்கள் ஆடுகளம் குறித்து விவாதித்தனர். பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் போட்டி நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. 

இதுபற்றி ரஹானே கூறும்போது, ‘ இந்த பிட்ச் சவாலானதாக இருந்தது. இருந்தும் நமது தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். முரளி விஜய் 127 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் எடுத்தார். இதே நிலைமைதான் மற்ற வீரர்களுக்கும். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலில் எல்லோருமே விளையாடினோம். நானும் புவனேஷ்வர்குமாரும் பேட்டிங் செய்யும் போது கூட பிட்ச் பற்றி நினைக்கவில்லை. பந்துகளை எப்படி அடிக்க வேண்டும் என்றுதான் யோசித்தோம். சில பந்துகள் எங்களை தாக்கியது உண்மைதான். விளையாட்டில் இதுவும் ஓர் அங்கம். வழக்கமானதை விட பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனதா என்று கேட்கிறார்கள். எனக்கு அப்படித் தெரியவில்லை. இந்த மாதிரியான பிட்சில் பந்து பவுன்ஸ் ஆவது வழக்கமானதுதான். புதிய பந்தை எதிர்கொண்டு முரளி விஜய் விளையாடியதும் நானும் புவனேஷ்வர்குமார் ஆடியதும் அப்படித்தான். இது அபாயகரமான பிட்ச் என்று தெரியவில்லை. இரண்டு அணிக்கும் ஒரே மாதிரியான பிட்ச்தானே. என் முழங்கையில் பந்து பட்டபோது, நடுவர் விசாரித்தார். ’உங்கள் பிசியோ-வை அழைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவையோ, எடுத்துக்கொண்டு பிறகு விளையாட்டைத் தொடருங்கள். ஒன்றும் அவசரமில்லை’ என்றார். அதன்படியே விளையாடினோம்’ என்றார் ரஹானே. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close