[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

இதுபோன்ற பிட்ச்-களில் ஆடியதில்லை: ’மேஜிக்’ பும்ரா பேட்டி

match-is-in-balance-right-now-jasprit-bumrah

ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறினார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாளில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆம்லா 61 ரன்களும், பிலாண்டர் 35 ரன்களும் எடுத்தனர். ரபடா 30 ரன்கள் எடுத்தார். பும்ரா 5 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. பார்த்திவ் படேல் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முரளி விஜய் 13 ரன்களுடனும், ராகுல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதுபற்றி பும்ரா கூறும்போது, ‘டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக 5 விக்கெட் எடுத்தது பற்றி கேட்கிறார்கள். நான் சீனியர் வீரர்களிடம் பேசும்போது, அவர்களின் ஆலோசனைகளை கேட்பேன். அப்படி கேட்டுக் கற்றுக்கொண்டது அதிகம். அதை வைத்தே பந்துவீசினேன். இதுபோன்ற பிட்ச்-களில் இதற்கு முன் ஆடியதில்லை. இந்த பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. சரியான இடத்தில் பந்துவீசினால் விக்கெட் கிடைக்கும் என்று நம்பினேன். அதன்படி விக்கெட் வீழ்த்தினோம். ’நைட்வாட்ச்மேன்’ ரபாடா நீண்ட நேரம் நின்று ரன் சேர்த்தது பற்றி கேட்கிறார்கள். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். இந்த மாதிரியான ஆடுகளத்தில் அதிகமான விக்கெட் விழும் என்று எதிர்பார்த்தோம். அதை நோக்கியே எங்கள் திட்டத்தை செயல்படுத்தினோம். ஹாசிம் அம்லாவும் சிறப்பாக விளையாடினார். அவர் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ஆட்டம் இரண்டு அணிக்குமே சாதகமாக இருக்கிறது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close