[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

’நின்று’ சாதித்தார் புஜாரா: கைதட்டிய வாழ்த்திய டீம்!

indian-batting-struggles-but-pujara-kohli-save

இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, முதல் ரன் எடுக்க 54 பந்துகளை எடுத்துக்கொண்டார்.

தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு சுருண்டது. 
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களான ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், முரளி விஜய் 8 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். புஜாரா 50 ரன்களிலும், கேப்டன் கோலி 54 ரன்களிலும் வெளியேறினார். ர‌ஹானே 9 ரன்களிலும், பார்த்திவ் படேல் 2 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். புவனேஷ்வர் குமார் 30 ரன்கள் எடுத்தார். 

தென்னாப்பிரிக்க தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளையும், பெலுக்வயோ, பிலாண்டர், மோர்கல் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.

நேற்றையை ஆட்டத்தில் பொறுமையை கடைபிடித்து அசத்தினார் புஜாரா. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த பிட்ச்-சில் ரன் எடுக்க இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். பந்து அதிகமாக ஸ்விங் ஆனதால் விக்கெட்டை காப்பாற்ற வீரர்கள் போராடினர். அதிலும் புஜாரா, நிதானத்தின் உச்சமாக ஆடினார். 

மறுமுனையில் விராத் கோலி, வேகம் காட்டினாலும், புஜாரா தன் பொறுமையை விடவில்லை. அவர் முதல் ரன் எடுக்க 54 பந்துகளை எடுத்துக்கொண்டார். அவர் அந்த ரன்னை எடுத்ததும் டிரெஸ்சிங் ரூமில் இருந்த இந்திய வீரர்கள் தவான், ரோகித், ராகுல், ரஹானே ஆகியோர் கைதட்டி ரசித்தனர். புஜாராவும் அடக்க முடியாமல் பின்னர் சிரித்தே விட்டார். அவரது ’பொறுமை’யை கேப்டன் கோலி, களத்தில் நின்றே பாராட்டினார். இருந்தாலும் அவரது பொறுமை அவர் 50 ரன் எடுக்கும் வரைதான் தாங்கியது. பெலுக்வயா பந்தில் அவர் அவுட் ஆனார். இந்த 50 ரன்களை எடுக்க, அவர் 179 பந்துகளை சந்தித்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close