[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

ஐபிஎல் இறுதிப்பட்டியலில் 578 வீரர்கள்: அஸ்வின் உட்பட 16 முத்திரை வீரர்கள் அறிவிப்பு

ashwin-stokes-gayle-part-of-marquee-set

ஐபிஎல் போட்டியில் ஏலத்திற்கு வரும் வீரர்களின் இறுதி பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழக வீரர் அஸ்வின் உட்பட 16 பேர் முன்னணி வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பதினோராவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது.
ஏலத்திற்கு மொத்தம் 1,122 வீரர்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 578 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இவர்களில் 360 இந்தியர்களும் அடங்குவர்.

சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் வீதமும், மற்ற வீரர்களுக்கு ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் என்ற வீதமும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யுவராஜ்சிங், அஸ்வின், ரஹானே, ஷிகர் தவான், கவுதம் கம்பீர், ஹர்பஜன்சிங், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் (இங்கிலாந்து), ஸ்டார்க், மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல், பொல்லார்ட், வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்), டு பிளிசிஸ் (தென்னாப்பிரிக்கா) ஆகிய 16 வீரர்கள் முத்திரை வீரர்களாக இடம்பெற்றுள்ளனர் 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close