[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

குப்தில் அசத்தல் சதம்: போராடி தோற்றது பாகிஸ்தான்!

new-zealand-overcome-late-surge-to-seal-5-0-sweep

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. 

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு ஒருநாள் போட்டியிலும் வென்ற நியூசிலாந்து அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி வெலிங்கடனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியின் மார்டின் குப்தில் அபாரமாக ஆடி சதமடித்தார். ராஸ் டெய்லர் 59 ரன்கள் எடுத்தார். அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ரேயிஸ் 3 விக்கெட்டுகளையும் அஷ்ரப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, கடுமையாக போராடியும் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹாரிஸ் சோகைல் அதிகப்பட்சமாக 63 ரன்களும் சதாப் கான் 54 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குப்திலுக்கு வழங்கப்பட்டது.

தோல்விக்குப் பின் பேசிய, பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, ‘இந்த தொடர் எங்களுக்கு கடினமாக அமைந்துவிட்டது. இது, வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி. எங்கள் பேட்டிங் சரியாக அமையவில்லை’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close