[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

ஹர்திக் பாண்ட்யாவை என்னுடன் ஒப்பிடாதீர்கள்: கபில்தேவ்

if-pandya-makes-silly-mistakes-don-t-compare-him-with-me-kapil-dev

ஹர்திக் பாண்ட்யாவை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற ஆட்ட உத்தியை பின்பிற்றி விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் பாண்ட்யாவை தம்முடன் ஒப்பிட வேண்டாம் என முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். பாண்ட்யாவிடம் நிச்சயம் திறமை இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அதனை காண முடிந்ததாகவும் கபில்தேவ் கூறினார். ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும் பாண்ட்யா உளரீதியாக தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாண்ட்யா மோசமாக விக்கெட்டை இழந்ததாகவும் கபில்தேவ் சாடினார்.

முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இந்தப்போட்டியில் ஹர்திக் பாண்டா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தினார்.அவரது இன்னிங்ஸை முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினர். சிலர் தென்னாப்பிரிக்காவில்  நடந்த போட்டியில் ஆலன் டொனால்ட் பந்துவீச்சை விளாசி 129 ரன்கள் குவித்த கபில்தேவை ஞாபகப்படுத்திவிட்டார்  என தெரிவித்திருந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close