[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

32 பந்தில் சதம்: ரிஷப் பன்ட் அதிரடி சாதனை!

pant-wallops-32-ball-hundred-the-fastest-by-an-indian

சையது முஸ்டாக் அலி டிராபி போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பன்ட் 32 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான, சையது முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் டெல்லி, இமாச்சலப்பிரதேச அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இமாச்சல் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பன்ட், 12 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 116 ரன்களும் காம்பிர் 30 ரன்களும் எடுத்தனர். ரிஷப், 32 பந்தில் சதமடித்தார். இதன் மூலம், டி20 போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரிஷப் பெற்றார். இதற்கு முன், ஐபிஎல் போட்டியில் 30 பந்துகளில் கிறிஸ் கெய்ல் சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.

விசாகபட்டினத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஹைதராபாத் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி தோற்கடித்தது. தமிழக அணி7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 42 ரன்களும், விஜய் ஷங்கர் 40 ரன்களும் எடுத்தனர். முஹமது ஹஸன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 194 என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியை அடுத்து 16 புள்ளிகளுடன் தமிழக அணி முதலிடத்தில் தொடர்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close