[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடுபவர் ரஹானேதான்: விராத் கோலி பேட்டி

rahane-is-quality-player-kohli

வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் வீரர் ரஹானேதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டி பற்றி இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, செஞ்சுரியன் பிட்ச் உயிரோட்டமாக இருக்கிறது. இது போன்ற பிட்சைதான் எதிர்பார்த்தோம். இது வேகப்பந்துவீச்சுக்கு சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறோம். இன்றைய போட்டியில் சுழல் பந்துவீச்சாளரை உட்கார வைத்துவிட்டு, அவருக்குப் பதில் வேறு ஒரு பேட்ஸ்மேனை சேர்ப்பது பற்றி கேட்கிறார்கள். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. எதையும் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்வோம். ரஹானேவை சேர்க்காதது பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். ரஹானே, தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பதும் அவர் சிறந்த வீரர் என்பது தெரியும். எங்கள் டீமில், வெளிநாடுகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் அவர்தான். அதனால் அவரை நாங்கள் அறிவோம்.

இருந்தாலும் இப்போது ஃபார்மில் யார் இருக்கிறார்களோ, அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டதால் பீதி அடைய வேண்டியதில்லை. வீரர்கள் தங்கள் திறமையை இந்தப் போட்டியில் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close