கிரிக்கெட்டில் தவறு செய்யாத வீரர்கள் யாரும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய பும்ரா, இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நாளை நடக்கிறது.
இதுபற்றி பும்ரா கூறும்போது, ’வெளிநாடுகளில் விளையாடுவது எப்போதுமே சவாலானதுதான். அங்குள்ள ஆடுகளமும் சீதோஷ்ண நிலையும் வித்தியாசமாக இருக்கும். அதனால் சவாலானது. அதிகமாக விளையாட விளையாடதான் அந்த நாட்டின் சூழ்நிலையையும் ஆடுகளத்தையும் கணிக்க முடியும். எந்த இடத்தில் பந்தை ’பிட்ச்’ செய்வது, எந்த ’லென்த்தி’ல் பந்துவீசுவது என்பதுபற்றி தெரிய வரும். தென்னாப்பிரிக்காவில் நான் இதற்கு முன் விளையாடியதில்லை. அதனால் சில தவறுகளை செய்திருக்கலாம். தவறு செய்யாத கிரிக்கெட் வீரர்கள் இருக்க முடியாது. அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்தப் போட்டியில் வெற்றி பெறுவோம். மீண்டும் அதே தவறை செய்ய மாட்டோம். ஒரு போட்டியில் தோற்றுவிட்டதால் நம்பிக்கை இழந்துவிட மாட்டோம். ஒவ்வொரு முறையும் கற்றுக்கொண்டு அதில் இருந்து தவறுகளை திருத்திக்கொண்டும் முன்னேற வேண்டும். என் முதல் போட்டியில், முதல் டெஸ்ட் விக்கெட்டாக டிவில்லியர்ஸை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்