[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

தென்னாப்பிரிக்காவில் இந்தியா ஜெயிக்கணும்னா... சேவாக் யோசனை!

virender-sehwag-advice-to-indian-team-for-2d-test

தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் யோசனை கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாகத் தோற்றது. வெற்றிபெற வேண்டிய போட்டியை பேட்டிங்கில் சொதப்பியதால் கோட்டை விட்டது இந்திய அணி. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் வெற்றிபெற வேண்டுமானாலும் விராத் கோலி, ரோகித் ஆகியோர் அதிக ரன்குவிக்க வேண்டும். அவர்கள் இருவரும் நிலைத்து நிற்கவேண்டும். ரஹானேவை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அவரைச் சேர்த்துவிட்டு ஒரு பந்துவீச்சாளரை குறைக்கலாம். அதாவது நான்கு ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளருடன் களமிறங்கலாம். பேட்ஸ்மேன்கள், ஆஃப்ட் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை தவிர்க்க வேண்டும். நேரடியான ஷாட்களையே ஆடவேண்டும். ஒரு ஓவருக்கு 3 ரன்கள் என்ற கணக்கில் ஆடவேண்டும். இப்படி செய்தால் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close