[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

20 விக்கெட்டுகளை வீழ்த்தியும் தோற்றுவிட்டோமே... விராத் விரக்தி!

taking-20-wickets-of-little-value-if-we-don-t-bat-well-virat-kohli

‘சரியான பார்ட்னர்ஷிப் இல்லாததே தோல்விக்கு காரணம்’ என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வென்றது. கேப்டவுன்
நகரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்தன.
தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு சுருண்டது. ஷமி, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை
வீழ்த்தினர். 208 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியினரின் அனல்
வேகப்பந்துவீச்சில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அஷ்வின் 37 ரன்கள் எடுத்தார். பிலாண்டர் 6 விக்கெட்டுகளை
வீழ்த்தினார். 

தோல்வி பற்றி இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ’இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் தோற்றோம். இருந்தாலும் எங்கள் பந்துவீச்சாளர்கள், தென்னாப்பிரிக்க அணியின், 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. பும்ரா, முதல் டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசினார். புவனேஷ்வர்குமார், ஷமி ஆகியோரும் நன்றாகவே பந்துவீசினார்கள். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக சிறப்பாகச் செயல்பட்டார். 250 முதல் 275 ரன்களை தென்னாப்பிரிக்க அணி இலக்காக நிர்ணயிக்கும் என்று நினைத்தோம். ஆனால் 210 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தினோம். யாராவது ஒருவர் 75 முதல் 80 ரன்கள் எடுத்து இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார்கள். எங்களுக்கு பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இந்த டெஸ்டில் செய்த தவறுகளை திருத்தி கொள்ள வேண்டியது அவசியம்’ என்றார் 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close