[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
விளையாட்டு 08 Jan, 2018 08:52 PM

பிலாண்டர் வேகத்தில் சரிந்தது இந்தியா: முதல் டெஸ்டில் தோல்வி

south-africa-won-by-72-runs

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 286, இந்தியா 209 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி 208 ரன்கள் என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 

தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய்யும், ஷிகர் தவானும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினர். 30 ரன்கள் எடுத்திருந்த போது தவான் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து முரளி விஜய் 13, புஜாரா 4 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 39 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. கோலி சற்று நேரம் தாக்குபிடித்து விளையாடி 28 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். கோலி ஆட்டமிழந்த போது இந்திய அணி 71 ரன்கள் எடுத்திருந்தது. கோலி ஆட்டமிழந்து 11 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா 10, சஹா 8, பாண்ட்யா 1 ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 

82 ரன்களுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் எடுப்பதற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்வின், புவனேஷ்குமார் இருவரும் இணைந்து தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். இதனால் சற்று நேரம் விக்கெட் விழாமல் இருந்தது. இந்த ஜோடி 49 ரன்கள் சேர்ந்தது. சிறப்பாக விளையாடிய அஸ்வின் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அஸ்வின் ஆட்டமிழந்த உடனே முகமது சமி, பும்ரா வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 135 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. 4-வது நாளிலேயே ஆட்டம் முடிவடைந்தது. 

          

தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பிலாண்டர்  42 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close