[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

முதல் டெஸ்டில் ஏமாற்றிய கோலி: விரக்தில் ரசிகர் தற்கொலை முயற்சி

kohli-careless-played-in-first-test-a-fan-of-man-attempt-suicide

டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் விராட் கோலி மோசமான ரன்களை எடுத்ததால், அவரின் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி துவங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்கிஸில் விளையாடிய விராட் கோலி குறைவான ரன்களை எடுத்திருந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், கோலியின் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும், விராட் தனது மனைவி அனுஷ்காவுடன் விடுமுறையைக் கழிப்பதற்காகவே தென்னாப்பிரிக்கா சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அனுஷ்கா சர்மா மும்பை திரும்பினார்.

இதற்கிடையில், கோலி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மோசமாக விளையாடியதால் அவரின் ரசிகர் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 65 வயதாகும் அவரின் பெயர் பாபுலால் பைரவ். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரட்லாம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். கோலியின் தீவிர ரசிகரான இவர், டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கோலி மோசமாக ஆடியதால் விரக்தில் இவ்வாறு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவருக்கு தலை, கைகள் மற்றும் முகப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும்,  காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற போது,  பாபுலால் மது அருந்திருந்தாரா? என்பது குறித்து மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close