[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
விளையாட்டு 08 Jan, 2018 10:09 AM

ரஹானேவை சேர்க்காதது வியப்பளிக்கிறது: கெப்ளர் வெசல்ஸ்

i-m-sure-india-will-bring-rahane-back-wessels

இந்திய கிரிக்கெட் அணியின் ஆடும் லெவனில் ரஹானேவை சேர்க்காதது வியப்பளிக்கிறது என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் கூறியுள்ளார்.

இதுபற்றி ’இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ’கடந்த சில தொடர்களில் ரஹானே ரன் குவிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், தென்னாப்பிரிக்காவில் அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவரை ஆடும் லெவனில் சேர்க்காதது எனக்கு வியப்பை தந்தது. அடுத்த டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம்பெறுவார் என்று நம்புகிறேன். தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் ஆக்ரோஷமாகவும் தைரியமாகவும் பந்தை எதிர்கொண்டு ஆடினால் மட்டுமே அதிக ரன்களை குவிக்க முடியும். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகள் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அடுத்து சிறப்பாக விளையாடுவார்கள். அதே நேரம் ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் மற்றவர்களுக்கு பாடமாக அமைந்திருக்கிறது. அடுத்து விளையாட இருக்கிற செஞ்சுரியன், வாண்டரர்ஸ் ஆடுகளங்கள் கேப்டவுன் களத்தை விட கடுமையானதாக இருக்கும். பயிற்சி ஆட்டம் இல்லாமல் நேரடியாக வெளிநாட்டுக்கு வந்து அந்த பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதானதல்ல.’ என்று அவர் கூறியுள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close