[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய பாண்ட்யா

hardik-pandya-scores-93-runs-and-takes-two-wickets-but-its-south-africa-who-are-in-control-at-newlands-with-a-lead-of-142

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சில் களக்கியுள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து, 286 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 

இதனையடுத்து, இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  இதனால் இந்திய அணி 92 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முரளி விஜய்(1), ஷிகர் தவான்(16), விராட் கோலி(5), ரோகித்(11), புஜாரா(26), அஸ்வின்(12), சாஹா(0) என சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பின்னர், ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். பவுண்டரிகளாக விளாசிய அவர் 46 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. பாண்ட்யாவுக்கு புவனேஷ்குமார் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது. புவனேஷ்குமார் 25(112) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த பாண்ட்யா 93(95) ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸரும், 14 பவுண்டரிகளும் அடங்கும். பாண்ட்யா ஆட்டமிழந்த போது இந்திய அணி 199 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 10 ரன்கள் சேர்ப்பதற்கு இந்திய அணி மீதமுள்ள விக்கெட்டையையும் இழந்தது. 209 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 

       

இதனையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 65 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ரம் 34(43), எல்கர் 25(54) ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா அணி மொத்தம் 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில் நாளை மீண்டும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் பேட்டிங்கை தொடர்வார்கள். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close