[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!

இந்தியாவுடன் ஆடவில்லை என்றால் பாக். கிரிக்கெட் செத்துவிடாது: மியான்தத் காட்டம்

pakistan-cricket-won-t-die-if-india-don-t-play-us-miandad

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் ஒன்றும் செத்துவிடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான் தத் கோபமாக கூறியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்களுடன் இந்தியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான் தத், கராச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, ’தங்களுடன் போட்டியை நடத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்சி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக பொருளாதார கட்டமைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேம்படுத்த வேண்டும். இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஒன்றும் செத்துவிடாது. எனவே அவர்களுடன் கிரிக்கெட் என்பது பற்றிய நினைப்பை மறந்து விட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுடன் விளையாடவில்லை. அதற்காக நமது கிரிக்கெட் நசிந்துவிட்டதா என்ன? இப்போதுதான் சிறப்பாக விளையாடி வருகிறோம். சாம்பியன் கோப்பையை வென்றது நல்ல உதாரணம்’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close