[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

36 வது ஓவரில் தப்பிய டுபிளிசிஸ், கத்திய விராத் கோலி!

hardik-pandya-angry-over-du-plessis

ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூவில் இருந்து தப்பிய தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ், அடுத்த இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே 12 ரன்கள் எடுப்பதற்குள் தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த விக்கெட்டுகளை புவனேஷ்வர்குமார் சாய்த்தார். பின்னர் அந்த அணி, 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முரளி விஜய் (1), தவான் (16), கோலி (5) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ளது. புஜாராவும் ரோகித் சர்மாவும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதல் இன்னின்சில் தென்னாப்பிரிக்க அணி ஆடும்போது, 36 வது ஓவரை இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வீசினார். அப்போது தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் காலில் பந்து பட்டது.  இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். நடுவர் ரிச்சர்ட் மறுத்ததால் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தார் இந்திய கேப்டன் விராத் கோலி. ‘ரீப்ளே’யில் பந்து, நடு ஸ்டம்பை தட்டியது. இதனால் அவுட் கொடுப்பார்கள் என்று இந்திய வீரர்கள் காத்திருந்தனர். ஆனால் மூன்றாவது நடுவர் களநடுவர் முடிவுக்கு விட்டுவிட்டதால், அவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் விராத் கோலி உட்பட இந்திய வீரர்கள் கோபத்தில் கத்தினர். ஆனால் அதே ஓவரில் அடுத்த 2 பந்திலேயே டுபிளிசிஸ் கீப்பர் சஹாவிடம் கேட்ச் ஆகி, வெளியேறினார். இதையடுத்து விராத் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் இன்னும் அதிகமாக கத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close