[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

மிதாலி ராஜ் பயிற்சியாளராக மாற வேண்டும்: ஷாரூக் கான்

mithali-raj-wants-to-become-a-coach-shahrukh-khan

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மாற வேண்டும் என்று பாலிவுட்
பிரபலம் ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வரும் கேப்டன் மிதாலி ராஜ், இந்தியாவில் அதிகம் பேசப்படும் நபராக மாறி வருகிறார். 35 வயதாகும்
இவர், பெண்கள் கிரிக்கெட்டில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை ஆவர். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஒன்றில் பங்கேற்ற பாலிவுட் ஸ்டார் ஷாரூக் கான் மிதாலியிடம் பல கேள்விகளை கேட்டார். அப்போது பேசிய அவர், மிதாலியை ஆண்கள் கிரிக்கெட்
அணியின் பயிற்சியாளராக பார்க்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு மிதாலியின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதன் பின்பு, ஷாரூக்கானுக்கு பதில் அளித்த மிதாலி, “நான்
எப்போதும் என்னுடைய சிறந்ததை தர விரும்புகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய மிதாலி, கிரிக்கெட் போட்டியின் போது புத்தகம் படிக்கும்
ரகசியத்தை பற்றியும் கூறினார். கிரிக்கெட் போட்டியின் போது புத்தகம் படிப்பதால், கவனம் சிதறாமல் தொடர்ந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த
முடிகிறது என்றும், களத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த புத்தகங்கள் உதவுகிறது என்றும் மிதாலி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close