[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
விளையாட்டு 02 Jan, 2018 09:40 AM

தென்னாப்பிரிக்காவில் சாதிக்குமா இந்தியா?

team-india-victory-continues-in-south-africa

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு விளையாடவுள்ள போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது. இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர்களை இந்தியா வென்றிருந்தது. இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஓயிட் வாஷ் செய்தது. இவை அனைத்தும் ஆசிய கண்டங்களில் நடைப்பெற்றது. ஆனால் தென்னாப்பிரிக்கா தொடர் அப்படி அல்ல, அங்குள்ள ஆடுகளங்கள் மாறுபட்டவை. வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு அளிக்கும். பந்துகள் நன்றாக பவுன்சாகும். கடந்த முறை இந்தியா அங்கு விளையாடிய போது இந்திய பேட்ஸ்மேன்கள் பவுன்சர்களில் திணறினர். இதனை கோலியே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் சமாளித்து இந்திய வீரர்கள் அங்கு முத்திரை பதிக்கவேண்டும். தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்நேரம் இந்த வீரர்களை வீழ்த்துவதற்கான வியூகங்களை அவர்கள் வகுத்திருப்பார்கள். அவற்றை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. 
இவ்விரு அணிகளும் 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டிகள். 3டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளன. போட்டி அட்டவணைகள் பின்வருமாறு.

டெஸ்ட் போட்டிகள்: 

1) முதல் டெஸ்ட், ஜனவரி 5-9
   நியூலாண்ட்ஸ், கேப் டவுன்

2) 2 வது டெஸ்ட், ஜனவரி 13-17 
சூப்பர் ஸ்போர்ட் ஃபார்க், செஞ்சுரியன்

3) 3 வது டெஸ்ட், ஜனவரி 24-28 
ஜோகன்ஸ்பர்க், தி வாண்டரர்ஸ் ஸ்டேடியம், 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்: 

 1) முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 1, கிங்ஸ்மித், டர்பன்.
 2) பிப்ரவரி 4, சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன்.
 3) பிப்ரவரி 7, நியூலாண்ட்ஸ், கேப் டவுன்.
 4) பிப்ரவரி 10, தி வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்ஸ்பர்க்.
 5) பிப்ரவரி 13, செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத்.
 6) பிப்ரவரி 16, சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன்.

டி 20 தொடர்

முதல் போட்டி:பிப்ரவரி 18, தி வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்
 2வது  டி20, பிப்ரவரி 21, சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன்.
 3வது  டி20, பிப்ரவரி 24, நியூலாண்ட்ஸ், கேப்டவுன்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close