[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
விளையாட்டு 31 Dec, 2017 08:07 AM

டிவில்லியர்ஸ் நண்பர்தான் அதுக்காக..? விராத் கோலி கேள்வி!

ab-de-villiers-is-a-great-friend-of-mine-virat-kohli

’தென்னாப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் என் நண்பர்தான். அதற்காக போட்டி என்று வந்துவிட்டால் களத்தில் வேறுவிதமாகவே இருப்போம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட  அங்கு சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் செய்தியாளர்களைச் சந்தித்த விராத் கோலி கூறியதாவது:

நானும் டிவில்லியர்ஸும் நண்பர்கள். அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இருவரும் விளையாடி வருகிறோம். ஆனால் அது வேறு. இங்கு எதிரெதிர் அணிகளில் விளையாடுகிறோம். அதனால் போட்டியாளராகத்தான் அவரைப் பார்ப்போம். அவரை விரைவில் அவுட் ஆக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். 

இதற்கு முன் தென்னாப்பிரிக்கத் தொடரில் என்ன நடந்தது என்பது பற்றி பேச விரும்பவில்லை. இப்போது திறமையை எப்படி வெளிப்படுத்தி என்ன செய்யப்போகிறோம் என்பதை மட்டுமே பார்க்கிறோம். சரியான போட்டியாளருடன் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் அணி வேட்கையோடு இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் தங்கள் திறமையை இங்கு நிரூபிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். அதற்கான திட்டங்களை வகுத்திருக்கிறோம். தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் தயாராகவே இருக்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை வந்து அதை பாருங்கள்’ என்றார் விராத் கோலி. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close