[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
  • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
  • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
  • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
  • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
  • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
  • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
விளையாட்டு 30 Dec, 2017 11:04 AM

ஸ்மித் மீண்டும் அபார சதம்: டிரா ஆனது 4வது ஆஷஸ் டெஸ்ட்!

smith-and-mitchella-marsh-bring-draw-close

இங்கிலாந்து அணியுடனான 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அபார சதம் அடித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதன் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் வார்னர் மட்டும் சதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  

அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக் அபாரமாக ஆடி, இரட்டை சதம் அடித்தார். இது
அவருக்கு ஐந்தாவது இரட்டை சதம். அவர் நிலைத்து நின்று ஆடினாலும் மற்றவர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம்
 இருந்தனர். அவர் 244 ரன் எடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 491 ரன்கள் எடுத்தது. 


பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. பேன்கிராப்ட் 27 ரன்களும் கவாஜா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வார்னர் 86 ரன்களிலும் ஷான் மார்ஷ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி இந்தப் போட்டியிலும் சதம் அடித்தார். இது அவருக்கு 23 வது டெஸ்ட் சதம். நடப்பு ஆஷஸ் தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இது. பின்னர் ஆஸ்திரேலிய 4 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்த நிலையில்  போட்டி டிரா  ஆனது.  ஸ்மித் 102 ரன்களுடனும் மிட்செல் மார்ஷ் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close