[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
விளையாட்டு 30 Dec, 2017 10:03 AM

என்னை ஏன் ஓரங்கட்டுகிறார்கள் என்று தெரியவில்லை: மலிங்கா ஓபன் டாக்!

still-waiting-to-know-why-i-m-being-rested-malinga

’எனக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏன் ஓய்வு அளித்திருக்கிறது என்பது தெரியவில்லை’ என்று இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. யார்க்கர் ஸ்பெஷலிஷ்டான இவர், சமீப காலமாக அந்த அணியில் தேர்வுசெய்யப்படாமல் ஓரங்கப்பட்டு வருகிறார். இலங்கை சென்றிருந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் பங்கேற்ற மலிங்கா, அதன் பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு கூறியது. இதற்கிடையே இலங்கை விளையாட்டு அமைச்சரின் விமர்சனத்துக்கு காட்டமாக பதில் தெரிவித்திருந்ததுதான் மலிங்கா ஓரங்கட்டப்படுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இஎஸ்பிஎன் -க்கு வழங்கிய பேட்டியில் மலிங்கா கூறியிருப்பதாவது:

எனக்கு ஏன் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 25, 26 வயதுள்ள வீரருக்கு ஓய்வு கொடுத்தால் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு விளையாட காலம் இருக்கிறது. ஆனால், என்னை போன்ற மூத்த வீரர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவோம். இந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு ஓய்வு என்று சொன்னால், இனி விளையாட வாய்ப்பு கிடைக்குமா? இதற்கான காரணம் தெரியவில்லை. 2019- உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அதில் நான் இடம்பெற்றால் அதுதான் என் கடைசி தொடராக இருக்கும். 

நான் விளையாடிய கடந்த 13 போட்டிகளில் 10 விக்கெட் எடுத்துள்ளேன். கடந்த 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் நான் அதிக விக்கெட் எடுக்காத வருடம். இருந்தாலும் அந்த 13 போட்டிகளிலும் எனது பந்துகளில் 12 கேட்ச்கள் விடப்பட்டிருக்கின்றன. எனது பந்துவீச்சு ஃபார்ம் பற்றி என்னிடம் யாராவது பேச முன்வந்தால் நான் பேச தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு மலிங்கா தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close