பிரிஸ்பென் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முதல் நிலை வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.
ஸ்பெயினை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். காயம் காரணமாக பிரிஸ்பென் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடால், இந்த வருடம் என்னால் பிரிஸ்பேனுக்கு வர இயலாது என அறிவிப்பதற்கு வருந்துகிறேன். என் எண்ணம் விளையாட வேண்டும் என்பதே. ஆனால் கடந்த வருடம் நீண்ட தொடர்களை விளையாடியதால் நான் இன்னும் தயாராகவில்லை. எனினும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அவரது ரசிகர்கள், காயத்திற்காக வருந்துகிறோம், இதற்காக நீங்கள் மன்னிப்பு கோர வேண்டாம். முக்கியமான விஷயம், நீங்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்பதுதான். வேகமாக மற்றும் முழுவதுமாக காயத்தில் இருந்து மீண்டு களத்திற்கு வர வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். உங்களை ஆடுகளத்தில் பார்க்கமுடியாதது கவலையாக இருக்கும். இருப்பினும் உங்கள் ஆரோக்கியம்தான் முக்கியம். நன்றாக ஓய்வெடுங்கள்! உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்! நீங்கள் முழு உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்குங்கள் நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்பன போன்ற உணர்ச்சிகரமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 15-ஆம் தேதி மெல்பர்னில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்
சிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்
மகள் - மகனை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்