[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு: ரஹானே ஐடியா!

ashwin-jadeja-need-to-change-their-style-rahane

தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பந்துவீசும் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி ஐந்தாம் தேதி தொடங்குகிறது. 

இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே கூறும்போது, ’2018-ம் ஆண்டு எனக்கானதாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போது தென்னாப்பிரிக்கத் தொடரில் மட்டுமே எனது கவனம் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்படுவோம். தென்னாப்பிரிக்கச் சூழல் இந்திய சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதற்காக எங்களை தயார்படுத்தியுள்ளோம். அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியும் சவால் நிறைந்ததாக இருக்கும். அதை வெற்றியாக மாற்றுவோம். அதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 
எனது பார்ம் பற்றி கேட்கிறார்கள். விளையாட்டில் ஏற்ற இறக்கம் சகஜம். ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டிருக்கிறோம். தென்னாப்பிரிக்கத் தொடரில் சிறப்பாக விளையாடுவேன். நமது பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன், இங்கிலாந்தின் மொயின் அலி போன்ற வீரர்கள் எதிரணியின் மைதானத்தில் விளையாடும் போது பந்துவீசும் முறைகளில் மாற்றம் செய்கின்றனர். அதே போல நமது அணியின் அஸ்வின், ஜடேஜா போன்றோர் இந்தியாவில் விளையாடுவது போல் அல்லாமல் வெளிநாட்டு பிட்ச்-சின் தன்மைக்கு ஏற்ப பந்துவீசினால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும்.

கேப்டன் விராத் கோலி, ஒவ்வொரு வீரரையும் உற்சாகப்படுத்துவார். இப்படி ஆடு, அப்படி ஆடு என்று அவர் எப்போதும் சொல்வதில்லை. உனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று மட்டுமே சொல்வார். அதோடு வெற்றி, தோல்வி பற்றி மனதில் ஏற்ற வேண்டாம் என்றும் கூறுவார்’ என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close