[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

பந்துக்கும் பேட்டுக்கும்தான் போட்டி, பெயர்களுக்கு அல்ல: முரளி விஜய் ரெடி!

my-battle-is-with-a-ball-and-not-with-the-names-murali-vijay

தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட இந்திய அணி எல்லாவிதத்திலும் தயாராக இருப்பதாக தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ’தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே நான் விளையாடி இருக்கிறேன். நம் வீரர்கள் சிலர் அங்கு ஏற்கனவே விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். அங்குள்ள பிட்ச்-களில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். சமீபத்தில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், இந்திய வீரர்களுக்கு பந்துவீச்சாளர் ஸ்டெயின் கடும் சவாலாக விளங்குவார் என்று கூறியிருந்தார். அது பற்றி கேட்கிறார்கள்.

பந்துக்கும் பேட்டுக்கும்தான் போட்டி. பெயர்களுக்கு அல்ல. அதனால் அதைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் பந்துவீச்சில் மிரட்டினாலும் நமது பந்துவீச்சாளர்களும் மிரட்டலாகச் செயல்படுவார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் தவான், கே.எல்.ராகுல், நான் என 3 பேரும் ஃபார்மில் இருப்பது பற்றி கேட்கிறார்கள். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. எதுவாக இருந்தாலும் டிரெஸ்சிங் ரூமில் வெளிப்படையாகவே பேசுகிறோம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அதனால் அது ஒரு விஷயமில்லை’ என்றார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close