இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா சாதனை சதம் அடித்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, 35 பந்துகளில் சதம்அடித்தார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரின் சாதனையை ரோகித் சமன் செய்தார்.
இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ள ரோகித் சர்மாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. சுரேஷ் ரெய்னா, ரஸல் அர்னால்ட், அஸ்வின், மேக்லஹன், சஞ்சய் மஞ்சரேக்கர், விவிஎஸ். லக்ஷமண், ஆகாஷ் சோப்ரா, ஹர்ஷா போக்ளே மற்றும் ஏராளமான ரசிகர்கள் ரோகித்தை பாராட்டி ட்விட் செய்துள்ளனர்.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்