[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 3-வது வெற்றி

ipl-match-knight-riders-won

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியது.

மொஹாலியில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ஷான் மார்ஷ் 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் விளாசினார். முரளி விஜய் 26 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியில் மோர்னே மோர்கல், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய கொல்கத்தா அணிக்கு ராபின் உத்தப்பா-வும், கேப்டன் கம்பீரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு உத்தப்பா- கம்பீர் இணை 82 ரன்கள் குவித்தது. 24 பந்துகளில் அரைசதம் விளாசிய உத்தப்பா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து கம்பீர் 34 ரன்களில் வெளியேறினார். மனீஷ் பாண்டே 12 ரன்களிலும், ஷகீப் அல் ஹசன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 17.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close