[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
விளையாட்டு 21 Dec, 2017 03:01 PM

பாலிவுட் ஸ்டார் ஷாரூக்கானை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடம்!

kohli-overtake-the-bollywood-star-shahrukh-khan-place

இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை பின்னுக்கு தள்ளி, விராத் கோலி முதலிடம் பெற்றுள்ளார். 

2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு மிகச் சிறந்த வருடமாக அமைந்துள்ளது. கிரிக்கெட் துறையில் மிகச் சிறந்த சாதனைகளை செய்த
அவர், சமீபத்தில் தனது காதலியை கரம் பிடித்தார். அளவில்லா மகிழ்ச்சியில் இருக்கும் கோலி குறித்து தற்போது மற்றொரு இனிப்பான செய்தி
வெளியாகியுள்ளது. ’டஃப் அண்ட் ஃபெல்ப்ஸ்’ என்ற நிறுவனம் வருடந்தோறும் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலங்களின் பட்டியலை
வெளியிட்டு்ள்ளது. இந்த பட்டியலில் ஷாரூக்கான் முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டின் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலங்களின் பட்டியலில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோலி முதலிடத்தை
பெற்றுள்ளார். முதலிடத்தில் இருந்த ஷாரூக்கானை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, விராத் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரின் பிராண்ட்
மதிப்பு 144 மில்லியன் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54 சதவீதம் கோலியின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில்
இருக்கும் ஷாரூக்கின் பிராண்ட் மதிப்பு 106 மில்லியன். கடந்த ஆண்டைவிட இவரின் வளர்ச்சி 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.  இவர்களை தவிர
முன்னாள் கேப்டன் தோனி 13-வது இடத்தை பெற்றுள்ளார். ஒலிம்பிக் புகழ் பி.வி சிந்து இந்த பட்டியலில் 15 ஆவது இடத்தில் உள்ளார். தனியார்
நிறுவன பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலமும், விளம்பர தூதுவர்களாக இருப்பதன் மூலமும் பிரபலங்களுக்கு கிடைக்கும் பண மதிப்பினை
அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல்  தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close