[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

அந்த வேகத்தில் என்னை கொன்றிருப்பார் தோனி: கே.எல்.ராகுல் ’திடுக்’

when-ms-dhoni-almost-killed-k-l-rahul

’தோனி அடித்த ஒரு நேர் ஷாட் என் மீது பட்டிருந்தால் என்னை கொன்றிருப்பார்’ என்று கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கூறினார்.

இலங்கை அணியுடன் கட்டாக்கில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் ராகுல்,48 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். 

போட்டிக்குப் பின் பேசிய கே.எல்.ராகுல், ’தோனியின் ஆட்டத்திறன் (ஃபார்ம்) பற்றியே அதிகமானோர் பேசுகிறார்கள். அது என்ன ஃபார்ம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் தோனி சிறப்பாகவே ஆடுகிறார். அவருடன் ஆடும் போதெல்லாம் அவரின் ஆட்ட வேகம் கண்டு வியக்கிறேன். டிவியில் அவர் ஆடுவதை பார்க்கும்போது அவர் அதிகமாக ரன் குவிப்பவராகவே இருக்கிறார். கடந்த முறை கட்டாக்கில் விளையாடிய போது தோனி, 127 ரன்களில் 150 ரன்கள் குவித்தது ஞாபகம் இருக்கலாம். வீரர்கள் அறையில் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துபவராக இருக்கிறார் தோனி. அவர், மேட்ச் வின்னர். இந்தப் போட்டியில் அவர் அடித்த ஒரு ஸ்டிரைட் டிரைவ் பந்து என்னைக் கிட்டத்தட்டக் கொன்றிருக்கும். அவ்வளவு வேகம். நல்ல வேளையாக தப்பித்தேன்’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close