[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

மிரட்டிவிட்டார் தோனி: ரோகித் சிலிர்ப்பு!

msd-he-s-just-class-rohit-sharma

’வழக்கமாக சிறப்பாக விளையாடும் தோனி, இந்தப் போட்டியில் மிரட்டி விட்டார்’ என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறினார். 

இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 48 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். தோனி 22 பந்துகளில் 39 ரன்களும் மணிஷ் பாண்டே 18 பந்துகளில் 32 ரன்களும் ஆட்டமிழக்காமல் எடுத்தார். பின்னர் விளையாடிய இலங்கை அணி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ‘இந்தப் போட்டியில் தோனி மிரட்டலாக ஆடினார். பல போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிக்கு பங்காற்றியவர் தோனி. போட்டியை முடித்துவைப்பதில் வல்லவர். இந்தப் போட்டியிலும் சிக்சர் அடித்து முடித்தது சிறப்பு. நான்காவது வீரராக களமிறங்கி அவர் சரியாக விளையாடினார். அந்த இடத்துக்கு அவர்தான் பொருத்தமானவர். அவர்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும் என நினைக்கிறோம். மனீஷ் பாண்டேவும் சிறப்பாக ஆடினார். அணியில் இடம் கிடைத்தும் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அருமையாக அடித்து ஆடினார். குல்தீப்பும் சேஹலும் விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அவர்களைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அணிக்கு என்ன தேவை என்பதை சரியாக கணித்து  ஆடுகிறார்கள். ஆடுகளத்தில் பனியின் தன்மை இருந்தாலும் பாண்ட்யா, பும்ரா உட்பட அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close