[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

தென்னாப்பிரிக்கா அணியில் மீண்டும் டி வில்லியர்ஸ்: ரசிகர்கள் உற்சாகம்

after-a-long-time-ab-de-villiers-return-to-south-africa-team

தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியில் டி வில்லியர்ஸ், ஸ்டைன் ஆகிய வீரர்கள் நீண்ட இடைவேளைக்கு பின் இணைந்துள்ளனர். 

தென்னாப்பிரிக்க அணியில் முன்னனி வீரர்களாக டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்டைன் ஆகியோர் திகழ்கின்றனர். ஆனால் காயம் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின் டி வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாட வில்லை. இதேபோல், தோள்பட்டை வலி காரணமாக இந்தாண்டு சர்வதேச போட்டிகள் எதிலும் ஸ்டைன் கலந்து கொள்ளவில்லை. 

இந்நிலையில் டூ பிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில்  டி வில்லியர்ஸ், ஸ்டைன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோர்னே மோர்கல், பிலாண்டர் ஆகிய அனுபவ வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்க-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close