[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

முரளி விஜய், தவான், புஜாரா சிறந்த வீரர்கள்: கங்குலி சான்றிதழ்!

don-t-think-ajinkya-rahane-s-form-is-a-concern-sourav-ganguly

‘இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் அணியில் தவான், முரளி விஜய், புஜாரா சிறப்பாக செயல்படுகின்றனர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.

புனேவில் நடக்கும் பெங்கால்-டெல்லி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்வையிட்ட கங்குலி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை தவான், முரளி விஜய், விராத் கோலி, புஜாரா சிறப்பாக டெஸ்ட் போட்டியில் செயல்படுகின்றனர். தென்னாப்பிரிக்காவில் இவர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ரஹானே ’பார்ம்’பற்றி கவலைக்கொள்ளத் தேவையில்லை. அவர் சிறந்த வீரர். தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அவர் எளிதில் பார்முக்கு திரும்பிவிடுவார்.

ஹர்திக் பாண்ட்யாவை ஆறாவது வீரராக களமிறக்குவது பற்றி கேட்கிறார்கள். அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் அதைப்பற்றி சொல்வது சரியாக இருக்காது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தால் ஆடும் லெவனில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும். பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் ஒரு பேட்ஸ்மேனை எக்ஸ்ட்ராவாக சேர்க்க வேண்டும். சிறந்த வீரர்களை கொண்ட அணியாக இந்தியா இருந்தாலும் தென்னாப்பிரிக்க தொடர் எளிதானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close