[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு

ஆஷஸ் டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ashes-3rd-test-australia-won-by-an-innings-and-41-runs

இங்கிலாந்துக்கு எதிரான அஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக்கொண்டது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 403 ரன்கள் எடுத்தது. மலன் 140 ரன்களும் பேர்ஸ்டோவ் 119 ரன்களும் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஸ்மித் 239 ரன்கள் குவித்தார். மார்ஷ் 181 ரன்கள் எடுத்தார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தடுமாறியது. மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. பின்னர், ஹசில்வுட்டின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். அவர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இங்கிலாந்து அணி, 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக்கொண்டது. அந்த அணிக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close