[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பாண்டே, கார்த்திக், ஸ்ரேயாஸ்... இந்திய கிரிக்கெட்டில் கடும் போட்டி!

cricket-no-3-slot-still-in-race

இலங்கை அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது. இதில் வென்றால் தொடரை வெல்லலாம் என்பதால் இந்திய வீரர்கள் அதற்கான முனைப்பில் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில மாதங்களாக நான்காவது வீரராக களமிறங்க கடும் போட்டி நிலவி வருகிறது.

வழக்கமாக அந்த இடத்தில் இறங்கி ஆடும் யுவராஜ் சிங், சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு அணியில் இடம் கிடைக்காமல் இருக்கிறார். அவருக்குப் பதிலாக, அந்த இடத்தில் ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ராகுல், மணீஷ் பண்டே, ஆகியோரை இறக்கி சோதித்துப் பார்த்தது இந்திய அணி. இதில் கார்த்திக்தான் அந்த இடத்தில் சிறப்பாக ஆடியிருக்கிறார். மற்றவர்கள் ஒரு சில போட்டிகளைத் தவிர சரியாக சோபிக்கவில்லை. 

விராத் கோலியின் ஓய்வை அடுத்து, அவர் இறங்கும் 3 -வது இடத்தில், கடந்தப் போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், அனைவரின் கவனத்தையும் இழுத்திருக்கிறார். அவர் அடித்த 88 ரன்கள், அவருக்கு ஆடும் லெவனில் நிலையான இடத்தைப் பெற்று தந்திருக்கிறது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கத் தொடரில் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் இடங்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான பிரவின் அம்ரே கூறும்போது, ‘தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரர். அதோடு மணீஷ் பாண்டே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடந்த போட்டியில் சதம் அடித்தவர்.  ’ஏ’ அணியின் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சமீபத்தில் சதம் விளாசியவர் என்பதையும் மறந்துவிடக் கூடாது. இந்த மூன்று வீரருமே முக்கியமானவர்கள்தான்’ என்கிறார். 

கார்த்திக் கடந்த 5 ஒருநாள் போட்டிகளில், 50, 37, 64, 4, 0 ஆகிய ரன்களை எடுத்துள்ளார். பாண்டே, 3, 36, 33, 11, 2 ரன்கள் எடுத்திருக்கிறார். பாண்டேயை விட கார்த்திக்கும் ஸ்ரேயாஸும் ஒருபடி முன்னே இருக்கிறார்கள் என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எஸ்.பத்ரிநாத். 

டி20 போட்டியில், வீரர்கள் எந்த இடத்தில் இறங்கியும் விளையாடலாம். ஆனால் ஒரு நாள் போட்டியில் நான்காவது இடம் முக்கியம். நாளை நடைபெறும் போட்டியில் தினேஷ், மணீஷ், ஸ்ரேயாஸ் ஆகியோரில் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ, அவர்களுக்கு அந்த இடத்தில் நிரந்த இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close