[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ஐபிஎல் கிரிக்கெட்: புனே அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ipl-2016-kxip-beat-rps-by-six-wickets

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில்‌, 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றியை ருசித்தது.

மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புனே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டூ பிளஸ்ஸி 67 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்களும் விளாசினர். பஞ்சாப் அணி தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய பஞ்சாப் அணிக்கு, முரளி விஜய், மனன் வோரா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முரளி விஜய்-மனன் வோஹ்ரா இணை முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. மனன் வோஹ்ரா 51 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து ஷான் மார்ஷ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

முரளி விஜய் 53 ரன்களும், மில்லர் 7 ரன்களும் எடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் வேகமாக ரன்கள் சேர்க்க, பஞ்சாப் அணி 19-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. மேக்ஸ்வெல் 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். புனே தரப்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close