[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி

ipl-2016-rcb-vs-dd-dd-beat-rcb-by-7-wickets

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை வசப்படுத்தியது.

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்ர்ஸ் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதன்பின்னர் விராட் கோ‌லியும், டி வில்லியர்ஸ்-சும் இணைந்து வேகமாக ரன்கள் குவித்தனர்.

டி வில்லியர்ஸ் 55 ரன்களும், கோலி 79 ரன்களும் விளாசி வெளியேறினர். ஷேன் வாட்சன் தன்பங்கிற்கு 33 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஸ்ரேயேஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமலும், சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும் வெளியேறினர்.

இதன்பின்னர் டி காக்-கும், கருண் நாயரும் பெங்களுரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி ரன்கள் சேர்த்தனர். கருண் நாயர் அரைசதம் அடிக்க, டி காக் 48 பந்துகளில் சதம் விளாசினார். டிகாக் 51 பந்துகளில் 108 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். டெல்லி அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close