[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

தென் ஆப்பிரிக்கா தொடரை வென்று இந்தியா சாதிக்கும்: டிராவிட்

india-can-win-maiden-test-series-in-south-africa-believes-rahul-dravid

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அதன் சொந்த மண்ணில் வென்று இந்திய அணி சாதனை படைக்கும் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் தொடர்ந்து 9 தொடர்களை வென்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்தியா சமன் செய்தது. அடுத்து இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. தென் ஆப்பிர்க்காவுடன் ஜனவரி 5-ல் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது. மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள்.

தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், “தென் ஆப்பிரிக்காவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் மிகப்பெரிய வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது. அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஜடேஜா, அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் அனைவரும் 40-50 டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close