[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இன்று இரவு மும்பை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எந்த மொழியில் நடித்தாலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி - நடிகர் அரவிந்த் சாமி
  • BREAKING-NEWS தனது நடிப்புத் திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி - இளையராஜா
  • BREAKING-NEWS ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் வருகிறது, குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இந்தியாவில் மிகவும் திறமையான நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் - இளையராஜா
  • BREAKING-NEWS கட்சி அலுவலகத்திலுள்ள ஜெயலலிதா சிலையின் முகம் சீரமைக்கப்படும் என முதல்வர் உறுதி - மாஃபா பாண்டியராஜன்

வெற்றிமேல் வெற்றிகளை குவித்து இந்திய அணி சாதனை

virat-kohli-equals-ricky-ponting-s-record-of-nine-consecutive-test-series-win-as-captain

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 9 தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற போது சில கேள்விகள் எழுந்தது. கேப்டன் பொறுப்பு சுமையாகி கோலியின் பேட்டிங் திறன் குறைந்துவிடும் என்று பேசப்பட்டது. ஆனால், கேப்டன் பொறுப்பேற்றது அதில் கோலியின் அதிரடி ஆட்டமும் உக்கிரமடைந்துள்ளது. அதேபோல், வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறார். 

        

தற்போது, இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்துள்ளது. 

2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தான் இந்த சாதனை வெற்றி தொடங்கியது. தற்போது இலங்கைக்கு எதிரான தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

  • 1.இலங்கை 2-1(3), 2015 (சொந்த மண்ணில்)
  • 2.தென் ஆப்பிரிக்கா 3-0(4), 2015-16
  • 3.வெஸ்ட் இண்டீஸ் 2-0(4), 2016 (சொந்த மண்ணில்)
  • 4.நியூசிலாந்து 3-0(3), 2016-17
  • 5.இங்கிலாந்து 4-0(5), 2017
  • 6.வங்கதேசம் 1-0(1), 2017
  • 7.ஆஸ்திரேலியா 2-1(4), 2017
  • 8.இலங்கை 3-0, 2017 (சொந்த மண்ணில்)
  • 9.இலங்கை 1-0(3), 2017-18

        

மேலும், கேப்டனாக ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடன் விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார். 2005-ம் ஆண்டில் 31 வெற்றிகளை பாண்டிங் குவித்ததே இதுநாள் வரையில் சாதனையாக உள்ளது. தற்போது கோலியும் இந்த ஆண்டில் 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 

  • 31- ரிக்கி பாண்டிங், 2005
  • 31-விராட் கோலி, 2017
  • 29-ஜெயசூர்யா, 2001
  • 29-ரிக்கி பாண்டிங், 2005
  • 29-ரிக்கி பாண்டிங், 2007
  • 29-ஸ்மித், 2007
Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close