[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

விராட் கோலி எடுத்த துணிச்சலான முடிவு

kohli-declared-in-right-time

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். 410 ரன்கள் என்ற வெற்றி இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-ம் நாள் ஆட்டத்தில் சுமார் 20 ஓவர்களும், 5-ம் நாள் முழுமையாகவும் உள்ள நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அணி வீரர்கள் பார்மில் இல்லாததால் 410 ரன்கள் என்ற இலக்கை எட்ட வாய்ப்பு குறைவாக உள்ளது. இருப்பினும், மேத்யூஸ் மற்றும் சண்டிமால் இருவரும் நல்ல பார்மில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடியும் ரன்களை குவித்தனர்.

        

ஒருவேளை இலங்கை அணி சிறப்பாக விளையாடினால் வெற்றி பெறவும் ஓரளவு வாய்ப்பு உள்ளது. அப்படி தோல்வி அடைந்தால், இந்திய அணி பெரும் ஏமாற்றத்தை அளித்துவிடும். ஏனெனில் மற்ற போட்டியைப் போல் இந்தப் போட்டி இல்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், 9 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்ற அணி என்ற புதிய சாதனை படைப்பதை தவறவிட்டுவிடும். ஆனால் கோலி துணிச்சலாக டிக்ளேர் செய்தார்.  410 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 2 விக்கெட்டுகள் சாய்த்தார். நாள் கடைசி நாளில் 379 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. 7 விக்கெட்டுகள் மீதமுள்ளன. 

        

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி  5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 410 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close