[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
  • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
  • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
  • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
விளையாட்டு 04 Dec, 2017 07:10 PM

புஜாராவுடன் விளையாட பிடிக்காது: கோலி பேட்டி

do-not-like-to-play-with-pujara-kohli-s-interview

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனக்கு புஜாராவுடன் விளையாட பிடிக்காது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2வது நாள் போட்டியின் பயிற்சியின் போது, திடீரென்று கிரிக்கெட் வீரர் புஜாரா மைக்கை எடுத்துக் கொண்டு விராட் கோலியிடம் சென்றார். பின்பு அவரிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். இதனால் வியப்படைந்த விராட் கோலி, புஜாரா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிரித்துக் கொண்டே பதில் அளித்து அனைவரையும் திகைக்க வைத்தார். இதில் விராட் கோலியிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி அவருக்கு பிடிக்காத கிரிக்கெட் வீரர் யார்? மற்றும் யாருடன் விளையாட அவருக்கு பிடிக்காது? என்பதுதான்.

மிகவும் கலகலப்பாக நடைபெற்ற இந்த பேட்டியில் விராட் கோலி, புஜாரா பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக புஜாராவின் பொறுமையைக் கண்டு, தான் பல நேரங்களில் வியப்படைந்துள்ளதாகவும், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற எந்தவொரு விளையாட்டிலும் புஜாரா மிகவும் சிறப்பாக, பிரச்சனை வராதவாறு சில நுணுக்கங்களை கையாண்டு விளையாடுவார் என்றும் தெரிவித்தார். அதேபோல் இப்போது நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு காரணமே புஜாரா தான் என்று கோலி தெரிவித்துள்ளார். இறுதியாக கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளிலும், தன்னை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று இருப்பதால் புஜாராவை பிடிக்காது என்று கோலி சுவாரசியமாக பதில் அளித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close