[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

புதிய சாதனை படைக்கும் விராட் கோலி பட்டாளம்

virat-kohli-lead-indian-team-going-to-creat-new-record

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய சாதனை படைக்கவுள்ளது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி 405 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளதால் இலங்கை அணி தோல்வியை தவிர்க்கும் பொருட்டே விளையாடும். அப்படி இலங்கை வீரர்கள் 450 ரன்களுக்கு மேல் எடுக்கும் பட்சத்தில் தான் அது சாத்தியம் ஆகும். இல்லையெனில் சென்ற போட்டியைப் போல் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்தாலும் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிடும். அதேபோல், வெற்றி பெற்றால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெறும். இதனால், கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய சாதனையை படைக்க உள்ளது.

        

இந்திய அணி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் வெற்றி பெற்றால், அது இந்திய அணி தொடர்ந்து வெல்லும் 9வது டெஸ்ட் தொடராக இருக்கும். உலக அரங்கில் இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டுமே தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் வென்று சாதனை படைத்துள்ளது. எனவே கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இந்த தொடரையும் கைப்பற்றி, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்வார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close