[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்

ipl-cricket-gujarat-lions-beat-mumbai-indians

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் லயன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த ஆட்டத்தில் ‌3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றியை வசப்படுத்தியது.

மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 34 ரன்களும், டிம் சவுத்தி 25 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் வேகமாக ரன்கள் சேர்த்த குருனல் பாண்ட்யா 20 ரன்கள் விளாசினார். குஜராத் தரப்பில் தவல் குல்கர்னி, தாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

144 ரன்கள் என்ற வெற்றி இலக்கை குஜராத் அணி, கடைசிப்பந்தில் எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்த ஆரன் பின்ச், 54 பந்துகளில் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெய்னா 27 ரன்கள் எடுத்தார்.

மும்பை தரப்பில் மெக்கிளேகன் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close