[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

இந்தியா பேட்டிங்: ராகுல் வெளியே, முரளி விஜய் உள்ளே!

3-rd-test-india-won-the-toss-and-elected-to-bat

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய முரளி விஜய்-க்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவுக்கு பதில் முகமது ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தவானும் முரளி விஜய்யும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். 
 
விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்றுள்ளது. இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி கடைசி போட்டியில் டிரா செய்தாலே தொடரை வென்றுவிடும். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close