[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
விளையாட்டு 02 Dec, 2017 08:04 AM

அணி தேர்வு பற்றி கவலையில்லை: முரளி விஜய்!

murali-vijay-talks-up-openers-club-rapport

அணித்தேர்வு பற்றி மனதில் வைத்துக் கொள்ளாமல் வீரர்கள் வெளிப்படையேக பேசி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறினார். 

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ’தென்னாப்பிரிக்க தொடருக்காக டென்னிஸ் பந்தில் பயிற்சி எடுத்து வருகிறேன், பவுன்ஸை எதிர்கொள்ள இது பயிற்சி முறை. பயிற்சியில் வித்தியாசமாக எதையாவது செய்து சவாலுக்கு தயார் படுத்துகிறேன். மூன்று தொடக்க ஆட்டக்காரர்களும் (தவான், ராகுல், நான்) ஃபார்மில் இருக்கும்போது யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

நாங்கள் மூன்று பேருமே களத்துக்கு வெளியேயும் நண்பர்கள் என்பதால் இதில் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. மூன்று பேரும் ஃபார்மில் இருப்பது வருங்கால தொடருக்கு உதவும். அணித்தேர்வு பற்றி மனதில் வைத்துக் கொள்ளாமல் பகிர்ந்து கொள்வது உதவுகிறது.  நாங்கள் என்ன நினைத்தாலும் அதை வெளிப்படையாக பேசிவிடுகிறோம். நாங்கள் ஜாலியானவர்கள். களத்துக்கும் வெளியே பொழுதுகளை நன்றாகக் கழித்திருக்கிறோம். அது அணிக்கு நல்லதாக அமைகிறது. கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் பெரோஷ் ஷா கோட்லா ஆடுகளத்திலும் புல் வளர்க்கப்பட்டுள்ளது, தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக இது நிச்சயம் உதவும்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close