[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
விளையாட்டு 28 Nov, 2017 12:41 PM

நான் களத்தில் இறங்கிவிட்டால்... ரெய்னாவுக்கு தோனி பதில்!

ms-dhoni-s-reply-to-suresh-raina-s-not-captain-cool-comment

’ஆடுகளத்துக்குள் இறங்கிவிட்டால் அங்கு எப்போதும் நகைச்சுவையாக பேசமாட்டேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 'கூல் கேப்டன்' என்று அழைக்கப்படுபவர். மைதானத்தில் எந்த சூழ்நிலையையும் எளிமையாகவே கையாளுவார். நிதானம் இழக்காதவர் என்பதால் அவரை 'கூல் கேப்டன்' என்கிறார்கள்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா, டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘ தோனிக்கும் மைதானத்தில் கோபம் வரும். அதனை நீங்கள் பார்த்திருக்க முடியாது. காரணம், கேமரா எப்போது ஆனில் இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறியிருந்தார்.

இதுபற்றி தோனியிடம் கேட்டபோது, ’நாம் மகிழ்ச்சியாக இருக்க பல்வேறு இடங்கள் இருக்கிறது. ஆடுகளத்துக்குள் இறங்கிவிட்டால், அதில் நான் கவனமாக இருப்பேன். அங்கு நகைச்சுவையாக பேசமாட்டேன். ஆனால் டிரெஸ்சிங் அறையில் ஜாலியாக இருப்பேன். இதுதான் உண்மை’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close