[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

விராட் கோலிக்கு ஓய்வு: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

india-vs-sri-lanka-virat-kohli-rested-for-odi-series-rohit-sharma-named-captain

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உள்ளன. இந்த நிலையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, ஸ்ராயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், சேஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் இளம் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுலுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக விளையாடி வருவதாகவும், தென் ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராவதில் சிக்கல் உள்ளதாகவும் கேப்டன் கோலி கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close